பேக்கரிகளுக்கு வழங்கப்படும் கோதுமை மாவு 50% குறைப்பு; அநேக பேக்கரிகள் மூடப்படும் நிலை! - Yarl Voice பேக்கரிகளுக்கு வழங்கப்படும் கோதுமை மாவு 50% குறைப்பு; அநேக பேக்கரிகள் மூடப்படும் நிலை! - Yarl Voice

பேக்கரிகளுக்கு வழங்கப்படும் கோதுமை மாவு 50% குறைப்பு; அநேக பேக்கரிகள் மூடப்படும் நிலை!



கோதுமை மா நிறுவனங்களால் பேக்கரிகளுக்கு வழங்கப்படும் கோதுமை மாவின் அளவு 50 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நிறுவனங்கள் பெரிய அளவிலான பேக்கரிகளுக்கு கோதுமை மாவை விநியோகம் செய்தாலும், சிறிய மற்றும் நடுத்தர பேக்கரிகளுக்கு கோதுமை மாவு இல்லாததால் பல பேக்கரிகள் மூடப்பட்டு விட்டன.

கோதுமை மாவின் தரத்தில் பிரச்சினைகள் இருப்பதா கவும் இதனால் பாண் விற்பனை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

தரமற்ற கோதுமை மாவைப் பயன்படுத்துவதால், பாண் உள்ளிட்ட பேக்கரிப் பொருட்களை  பதப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரிப் பொருட்களின் விலையை ரூபா 5 முதல் 10 ரூபா வரை அதிகரிக்குமாறு பேக்கரி உரிமையாளர்களிடம் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

முட்டை ஒன்றின் விலை 25 முதல் 30 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளமை மற்றும் மரக்கறிகள், மீன், இறைச்சி மற்றும் பேக்கரி மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையால் பேக்கரித் தொழில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கோதுமை மாவு தட்டுப்பாடு காரணமாக பேக்கரி உரிமையாளர்களும் பிஸ்கட் தூள் தயாரிப்பதைக் கைவிட்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post