வடக்கில் மேலும் 9 பேருக்கு கொரோனா! - Yarl Voice வடக்கில் மேலும் 9 பேருக்கு கொரோனா! - Yarl Voice

வடக்கில் மேலும் 9 பேருக்கு கொரோனா!கிளிநொச்சியில் 14 வயதுடைய மாணவிகள் மூவர் உட்பட வட மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட அய்வுகூடத்தில் இன்று (டிச-16) மேற்கொள்ளப்பட்ட பரிசோததையில் 7 தொற்றாளர்களும், யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 2 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில்,

கிளிநொச்சி - உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலை ஊடாக பெறப்பட்டிருந்த மூவரின் மாதிரிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த மூவரும் உருத்திரபுரம் கிராமத்தில் உள்ள பராமரிப்பு இல்லம் ஒன்றில் பராமரிக்கப்பட்டு வரும் 14 வயது மாணவிகள் என தெரியவந்துள்ளது.

குறித் மூன்று மாணவிகளுக்கும் கொரோனா நோய்த் தொற்று அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன்,

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் - ஒருவர் (73 வயது ஆண்)
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் - ஒருவர் (41 வயது ஆண்)

பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலையில் - ஒருவர் (65 வயது பெண்)
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் - ஒருவர் (73வயது ஆண்)

யாழ். போதனா வைத்தியசாலையில் - ஒருவர் (69 வயது பெண்)
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் - ஒருவர் (21 வயது ஆண்)

0/Post a Comment/Comments

Previous Post Next Post