சேர். பொன் இராமநாதனின் 91 ஆவது குருபூசை அனுஷ்டிப்பு - Yarl Voice சேர். பொன் இராமநாதனின் 91 ஆவது குருபூசை அனுஷ்டிப்பு - Yarl Voice

சேர். பொன் இராமநாதனின் 91 ஆவது குருபூசை அனுஷ்டிப்புயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகாத்துக்கு அடித்தளமான பரமேஸ்வராக் கல்லூரியின் நிறுவுனரும், சைவப் பெரு வள்ளலாருமான சேர். பொன் இராமநாதனின் 91 ஆவது குருபூசை இன்று (08) புதன்கிழமை காலை இடம்பெற்றது.

பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் விசேட அபிஷேகம், பூஜையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள சேர். பொன். இராமநாதனின் உருவச் சிலைக்கும், சபா மண்டபத்தினுள் உள்ள உருவப் படத்துக்கும் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா மலர்மாலை அணிவித்து, வணக்கம் செலுத்தினார்.

இந்நிகழ்வில், சேர். பொன் இராமநாதன் அறக்கட்டளையின் சார்பில் பேராசிரியர் சி. சிற்றம்பலம் மற்றும் முன்னாள் துணைவேந்தரும், பேரவை உறுப்பினருமான பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை, பதிவாளர் வி. காண்டீபன், இந்து கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த முன்னாள் துறைத் தலைவர் பேராசிரியர் எம். வேதநாதன், முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் அ. சண்முகதாஸ், பேராசிரியர் திருமதி மனோன்மணி சண்முகதாஸ், பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post