பண்டிகைக் காலத்தில் நாடு மீண்டும் முடக்கப்படுமா? கெஹலிய ரம்புக்வெல பதில்! - Yarl Voice பண்டிகைக் காலத்தில் நாடு மீண்டும் முடக்கப்படுமா? கெஹலிய ரம்புக்வெல பதில்! - Yarl Voice

பண்டிகைக் காலத்தில் நாடு மீண்டும் முடக்கப்படுமா? கெஹலிய ரம்புக்வெல பதில்!கிறிஸ்மஸ் மற்றும் புது வருட பண்டிகைக் காலத்தில் நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய தேவை இல்லை என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"இலங்கையில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர்களில் வெளிநாட்டுப் பிரஜையைத் தவிர ஏனைய இலங்கையர்கள் குணமடைந்துள்ளனர்.

ஒமிக்ரோன் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட வெளிநாட்டுப் பிரஜை சென்ற இடங்கள் தொடர்பான சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனினும், நாட்டை மீண்டும் முடக்கிவிட வேண்டிய தேவை இல்லை" - என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post