இதுதான்யா அவரு மனசு.. பார்த்துக்கோங்க”.. விராட் கோலியின் வெகுளி குணம்.. ரசிகர்களை உருக வைத்த பதிவு! - Yarl Voice இதுதான்யா அவரு மனசு.. பார்த்துக்கோங்க”.. விராட் கோலியின் வெகுளி குணம்.. ரசிகர்களை உருக வைத்த பதிவு! - Yarl Voice

இதுதான்யா அவரு மனசு.. பார்த்துக்கோங்க”.. விராட் கோலியின் வெகுளி குணம்.. ரசிகர்களை உருக வைத்த பதிவு!தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது விராட் கோலி செய்த சேட்டையை ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இதற்கான இந்திய அணி நேற்றைய தினம் ( டிசம்பர் 16) தனி விமானம் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றது.
விமானத்தில் சென்ற போது, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி, பல்வேறு சேட்டைகளை செய்து வந்துள்ளார். ஒவ்வொரு வீரரிடமும் சென்று கலாய்த்து சிரிப்பது, வம்புக்கிழுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டார். வழக்கமாக விராட் கோலி சீரியஸான முகத்துடன் இருக்கும் நிலையில் அவரை ஜாலியாக கண்டது சக வீரர்களுக்கே ஆச்சரியமாக இருந்தது.

விமான பயணத்தின் போது இஷாந்த் சர்மா தனது பையில் இருந்து எதையோ எடுத்துள்ளார். இதனை பார்த்த கோலி, ‘உலகம் முழுவதும் சுற்றுவதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் கொண்டுவந்துவிட்டார் போல இஷாந்த் பாய் என கிண்டலடித்துள்ளார். இதற்கு பதிலளித்த இஷாந்த், "என்னை கலாய்க்காதே' எனச் சொல்ல அதனை கோலி கேட்கவே இல்லை.

இஷாந்த் சர்மா சிரிக்காதே எனக்கூறியும் கோலி, சிரிப்பை அடக்கமுடியாமல் வாய்விட்டு சிரிக்கிறார். மேலும் சில வீரர்களையும் விராட் கோலி கலாய்த்து தள்ள பயணம் முழுவதும் ஜாலியாக சென்றுள்ளது. இதுகுறித்த வீடியோயவை கண்ட ரசிகர்கள், கோலியின் உண்மையான குணம் தெரியாமல், அவரை காயப்படுத்திவிட்டார்கள் என பிசிசிஐ மீது அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

தென்னாப்பிரிக்க தொடர் முழுவதும் விராட் கோலி பங்கேற்பார் எனத் தெரிவித்துள்ளார். இதனால் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி எதிர்கொள்ளும் ஒருநாள் போட்டி தொடரிலும் விராட் கோலி விளையாடுவதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 19ம் தேதியன்று தொடங்குகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post