மீனவர் விவகாரத்தை அமைச்சர் டக்ளஸ் தீர்ப்பாரா? ஒத்துழைக்க தயார் என சுகிர்தன் அறிவிப்பு - Yarl Voice மீனவர் விவகாரத்தை அமைச்சர் டக்ளஸ் தீர்ப்பாரா? ஒத்துழைக்க தயார் என சுகிர்தன் அறிவிப்பு - Yarl Voice

மீனவர் விவகாரத்தை அமைச்சர் டக்ளஸ் தீர்ப்பாரா? ஒத்துழைக்க தயார் என சுகிர்தன் அறிவிப்பு
வடக்கு மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுப்பாராக இருந்தால் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ் மாவட்ட மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று யாழ் மாவட்ட மீனவர்களால் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் நேரடியாக வருகை தந்து சில உறுதிமொழிகளை அளித்து இந்த போராட்டத்தினை நிறுத்தியுள்ளார்.அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.


மீனவர்களுக்கு அவர் அளித்த வாக்குறுதிகளை கடற்றொழில் அமைச்சர் நிறைவேற்ற வேண்டும் அதற்கு நாமும் ஒத்துழைப்பு வழங்க தயார். ஆனால் மீனவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை பொய்யாகவோ அல்லது நிறைவேற்றாவிட்டாலோ நாங்கள் கடற்றொழில் அமைச்சருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை வரும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post