முல்லைத்தீவு கடலில் காணாமல் போயுள்ள வவுனியாவை சேர்ந்த மூவர் - ஒருவரது சடலம் மீட்பு – தேடும்பணிகள் தீவிரம் ! - Yarl Voice முல்லைத்தீவு கடலில் காணாமல் போயுள்ள வவுனியாவை சேர்ந்த மூவர் - ஒருவரது சடலம் மீட்பு – தேடும்பணிகள் தீவிரம் ! - Yarl Voice

முல்லைத்தீவு கடலில் காணாமல் போயுள்ள வவுனியாவை சேர்ந்த மூவர் - ஒருவரது சடலம் மீட்பு – தேடும்பணிகள் தீவிரம் !

வவுனியாவை சேர்ந்த மூவர் முல்லை கடலில் காணாமல் போயுள்ள நிலையில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீதிப்பேரினை தேடும்பணிகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

கடலில் காணாமல் போனவர்கள் விஜயகுமாரன் தர்சன் (தோனிக்கல் வவுனியா) , சிவலிங்கம் சமிலன் (மதவுவைத்தகுளம் வவுனியா) மனோகரன் தனுஷன் (மதவுவைத்தகுளம் வவுனியா) ஆகியோர் ஆவர்.

வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு கடற்கரைக்கு வந்ததாக கருதப்படும் இவர்கள் பாரிய அலையில் சிக்கி மூழ்கியுள்ளனர் ,

குறித்த சம்பவம் நடந்த போது அவ்விடத்தில் நின்ற இளம் பெண் ஒருவர் அருகில் நின்றவர்களிடம் தெரிவித்தும் உடனடியாக அவர்களை காப்பாற்ற முடியவில்லையென செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post