தனியாக உலகை சுற்றிவரும் சாரா இலங்கை வந்தார் - Yarl Voice தனியாக உலகை சுற்றிவரும் சாரா இலங்கை வந்தார் - Yarl Voice

தனியாக உலகை சுற்றிவரும் சாரா இலங்கை வந்தார்இலகுரக விமானத்தில் தனியாக உலகை சுற்றிவரும், 19 வயதுடைய இளம் பெண் சாரா ரதபோர்ட் (Zarah Rutherford) இன்று(28) இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

உலகை சுற்றி வந்த இளம் பெண் என்ற கின்னஸ் சாதனையை படைக்க சாரா திட்டமிட்டுள்ளார்.

இதன்படி, தனது பயணத்தின் ஒரு அங்கமாக அவர், இந்தோனேஷியாவிலிருந்து இவ்வாறு இலங்கை வந்துள்ளார்.

இந்த பயணத்தின் போது, ​​அவர் தனது விமானத்தை 52 நாடுகளில் தரையிறக்க திட்டமிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 11 ஆம் திகதி பெல்ஜியத்தின் ரஸல்ஸ் நகரில் தனது சுற்றுப் பயணத்தைத் தொடங்கிய சாரா, இன்னும் மூன்று மாதங்களில் அதனை நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post