யாழ். நவாலியில் வீடுபுகுந்து தாக்குதல் நடத்திய வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த மூவர் கைது! - Yarl Voice யாழ். நவாலியில் வீடுபுகுந்து தாக்குதல் நடத்திய வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த மூவர் கைது! - Yarl Voice

யாழ். நவாலியில் வீடுபுகுந்து தாக்குதல் நடத்திய வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த மூவர் கைது!யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். நவாலி பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்து கடந்த 15ம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் வாள்வெட்டுக்குப் பயன்படுத்தப்பட்டது என நம்பப்படும் வாள்கள் இரண்டும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இருவர் நாவாலி பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் பிடாரி அம்மன் கோவிலடியை சேர்ந்தவர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post