மனைவி தாக்கியதால் கணவன் மரணம் - Yarl Voice மனைவி தாக்கியதால் கணவன் மரணம் - Yarl Voice

மனைவி தாக்கியதால் கணவன் மரணம்நுவரெலியா பீட்ரு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட முரண்பாடு முற்றியதாலேயே கணவனை அடித்து மனைவி கொலை செய்திருக்கலாம் என பிரதேச மக்கள் பொலிஸாரிடம் தெரிவிக்கின்றன 

காரணம் மனைவிக்கும் வேறு ஒரு நபருக்கும் இடையே உள்ள கள்ளக்   காதல் விவகாரம் அம்பலமாகியதை கணவன் மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த மனைவி கணவனை பொல்லால் சரமாரியாக தாக்கியுள்ளார்.  கடுமையாகத் தாக்கப்பட்ட குடும்பத் தலைவரின் உடலில் 5 இற்கும் மேற்பட்ட காயங்கள் காணப்படுவதாக ம பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில்  44 வயதான மூன்று  பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post