பாகிஸ்தான் தாலிபான் தலைவர் மீதான ட்ரோன் தாக்குதல் தோல்வி - Yarl Voice பாகிஸ்தான் தாலிபான் தலைவர் மீதான ட்ரோன் தாக்குதல் தோல்வி - Yarl Voice

பாகிஸ்தான் தாலிபான் தலைவர் மீதான ட்ரோன் தாக்குதல் தோல்வி


 
பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையோரம் பாகிஸ்தானிய தாலிபான்களின் மிக முக்கிய தலைவர் ஒருவரை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

 
ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஆளில்லா விமானத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இலக்கான வீட்டில் மோதியும் வெடிக்கவில்லை என பாகிஸ்தான் தாலிபான்கள் தகவல் வெளியிட்டு உள்ளனர்.

தெஹ்ரிக்  தாலிபான் அமைப்பின் மூத்த தலைவரான மவுலவி ஃபக்கிர் மொஹம்மது தங்கியிருந்த ஹூஜ்ரா என்ற வீட்டின் மீது தான் இந்த தாக்குதல் நடைபெற்றது.
 
இந்த ஃபக்கிர் மொஹம்மது ஆஃப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் சிறையில் எட்டு ஆண்டுகள் தண்டனை  பெற்றவர் என்பதும்  என்பதும் தாலிபான்களின் எழுச்சியால் விடுதலை ஆனவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post