கேமராவுடன் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்.. இயக்குனராக போகிறாரா?அடுத்த பிளான் என்ன? - Yarl Voice கேமராவுடன் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்.. இயக்குனராக போகிறாரா?அடுத்த பிளான் என்ன? - Yarl Voice

கேமராவுடன் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்.. இயக்குனராக போகிறாரா?அடுத்த பிளான் என்ன?


 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய்.  தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவர் நடிப்பில்   வெளியான மாஸ்டர் திரைப்படம், பல வசூல் சாதனை படைத்தது. விஜய் இந்த படத்தில் வாத்தியாராக நடித்து பாராட்டுக்களை பெற்றார்.

தற்போது சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் "பீஸ்ட்"  படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது இப்படத்தின் அடுத்தகட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யின் புகைப்படங்கள் தான் சமூகவலை தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

அந்த புகைப்படத்தை பார்க்கும் போது அவர் படப்பிடிப்பில் இருப்பது போல் தெரிகிறது. அதில் கையில் ஒரு மைக்கை வைத்துக்கொண்டு நிற்கிறார்.

 அவர் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம்,  விஜய் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்தார். கொரோனா சமயத்தில் தான் சென்னை வந்தார்.

 தனது அப்பா போலவே இவருக்கும் சினிமா மீது ஆசை இருக்கிறது. ஆனால் சஞ்சய்க்கு இயக்குனராகவே அதிக விருப்பம் என கேள்விப்பட்டிருந்தோம். சில குறும்படங்களும் அவர் இயக்கியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு இவர் நிவின் பாலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், தனது நண்பர்களுடன் காரில் நடனமாடிய வீடியோவும் தற்போது  விஜய் ரசிகர்களால்  ஷேர் செய்யப்பட்டு வருகின்றது. இப்பொழுதும் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஏதோ ஒரு படப்பிடிப்பு நடப்பது போல் தெரிகிறது.

 அதில் வீட்டில் படப்பிடிப்புக்காக லைட்டிங்  செட் செய்துள்ளது.  இவரும் கையில் மைக்கை வைத்துக்கொண்டு நிற்கிறார். இந்த புகைப்படங்களும், வீடியோவும் வெளிவந்துள்ளது.

இவர் படம் இயக்குகிறாரா? அல்லது படம் நடிக்கிறாரா? என்ற எந்த தகவலும் இல்லை. பல முன்னணி நடிகர்களின் மகன்கள் சினிமாவில் அறிமுகமாகி வரும் நிலையில், இவரும் சினிமாவில் எப்போது என்ட்ரி கொடுப்பார் என்று விஜய் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சஞ்சய், அவரது அப்பாவுடன் அறிமுகமாவாரா, இல்லை இயக்குனராவாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post