இதுவரை தங்கள் குழந்தையின் முகத்தை காமிக்காமல் இருப்பதற்கு இது தான் காரணம்! அனுஷ்கா விராட் ஜோடியின் பதிவு! - Yarl Voice இதுவரை தங்கள் குழந்தையின் முகத்தை காமிக்காமல் இருப்பதற்கு இது தான் காரணம்! அனுஷ்கா விராட் ஜோடியின் பதிவு! - Yarl Voice

இதுவரை தங்கள் குழந்தையின் முகத்தை காமிக்காமல் இருப்பதற்கு இது தான் காரணம்! அனுஷ்கா விராட் ஜோடியின் பதிவு!இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா ஜோடி நீண்ட நாட்கள் காதலித்து பின்னர் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி இத்தாலியில் நெருங்கிய உறவினர்களுக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டனர். தங்களது திருமணத்திற்கு பிறகும் செல்வாக்குமிக்க ஜோடியாக திகழ்ந்த வந்தவர்கள் இந்த ஆண்டு ஜனவரி 11-ஆம் தேதி அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார்கள்.

தங்களது குழந்தைக்கு வாமிகா என்று பெயர் வைத்த இவர்கள் இதுவரை தங்களது குழந்தையின் முகத்தை எந்த ஒரு சமூக வலைதளப் பக்கத்திலோ அல்லது புகைப்படமாகவோ வெளியிடவில்லை. மேலும் தாங்கள் வெளியே எங்கே சென்றாலும் தங்களது குழந்தையை யாரும் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றும் சமூக தளத்தில் வெளியிட வேண்டாம் என்றும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

அந்தவகையில் தற்போது தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணத்திற்கு குழந்தையுடன் சென்றுள்ள விராட் கோலி அங்கும் தனது குழந்தையை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று நிருபர்களை கேட்டுக் கொண்ட வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்நிலையில் தங்களது மகளின் முகத்தை இதுவரை வெளியுலகத்திற்கு காட்டாமல் இருப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்து அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது : வாமிகாவின் புகைப்படத்தையோ அல்லது வீடியோவையோ இதுவரை வெளியிடாமல் இருக்கும் ஊடகங்களுக்கு நன்றி. ஒரு பெற்றோராக நாங்கள் எங்களது மகளின் புகைப்படத்தையும், வீடியோவையும் வெளியிட வேண்டாம் என்று தொடர்ச்சியாக ஊடகத்துறையிடம் கேட்டுக் கொண்டிருந்தோம். அதன்படி இதுவரை எந்த ஒரு புகைப்படத்தையும் எடுக்காமல் இருப்பதற்கு நன்றி.

எங்களது குழந்தை சமூக வளைதளம் மூலமாகவோ அல்லது மீடியா மூலமாகவோ அறியப்பட்டு வளரக் கூடாது என்பதற்காகவும், எங்களது குழந்தையின் வாழ்க்கை மிகவும் ஃப்ரீயாகவும், இலகுவாக அமைய வேண்டும் என்பதனாலேயே நாங்கள் இதனை தவிர்த்து வருகிறோம். என்பதாகவும் தெரிவித்துள்ளார். அதைப் பார்த்த பலரும் ஆச்சர்யத்தில் உள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post