ஒமைக்ரான் வேகம் அதிகரிப்பு: இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் - மத்திய அரசு அறிவுறுத்தல் - Yarl Voice ஒமைக்ரான் வேகம் அதிகரிப்பு: இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் - மத்திய அரசு அறிவுறுத்தல் - Yarl Voice

ஒமைக்ரான் வேகம் அதிகரிப்பு: இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் - மத்திய அரசு அறிவுறுத்தல்
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என மத்திய சுகாதாரத்துறை செயலார் ராஜேஷ் பூஷன் கூறியுள்ளார்.
இந்தியாவில் 213 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 77 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தநிலையில்,  மத்திய சுகாதாரத்துறை செயலார் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 

கொரோனா தொற்று பரவல் 10% மேல் இருந்தால், அந்த பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

டெல்டாவை விட ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று 3 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்பதால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் ஆக்சிஜன் வசதி இருப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் 4 நாட்களில் ஒமிக்ரான் பரவல் இரட்டிப்பாகியுள்ள நிலையில், கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post