அமைதியின்மையை தூண்டினார் கொவிட் விதிமுறைகளை மீறினார்- ஆங்சான் சூகிக்கு நான்கு வருட சிறை - Yarl Voice அமைதியின்மையை தூண்டினார் கொவிட் விதிமுறைகளை மீறினார்- ஆங்சான் சூகிக்கு நான்கு வருட சிறை - Yarl Voice

அமைதியின்மையை தூண்டினார் கொவிட் விதிமுறைகளை மீறினார்- ஆங்சான் சூகிக்கு நான்கு வருட சிறைஅமைதியின்மையைத்  தூண்டினார் கொவிட் விதிமுறைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் மியன்மார் நீதிமன்றம் ஆங் சான் சூகிக்கு நான்கு வருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

ஆங்சான் சூகிக்கு எதிராக 11 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்ததும் அவர் அதனை நிராகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த பெப்ரவரியில் மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது முதல் ஆங்சான் சூகி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் சிறையில் அடைக்கப்படுவாரா என்பது தெரியவரவில்லை.

நீதிமன்ற நடவடிக்கைகள் நியாயமற்றவை என கருத்துக்கள் வெளியாகியிருந்த  நிலையிலேயே இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.

கடந்த வருடம் தேர்தல் பிரச்சாரத்தின் போது சூகி முகக்கவசம் அணிந்து மக்கள் முன் தோன்றிய போதிலும் அவர் கொவிட் விதிமுறைகளை மீறினார் என  குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

சதிப்புரட்சிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என அவரை மேற்கோள் காட்டி அவரது கட்சி வெளியிட்ட அறிக்கை அமைதியின்மையை தூண்டுகின்றது என குற்றம்சாட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி வின் மையின்டிற்கும் இதே குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நீதிமன்றம் நான்கு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post