சிறு வயதில் நடிப்பு ஆர்வம்.. இளமையில் குடும்ப பாரம்… முன்னணி நடிகையாக ஜெயித்த ரோஜா கதை - Yarl Voice சிறு வயதில் நடிப்பு ஆர்வம்.. இளமையில் குடும்ப பாரம்… முன்னணி நடிகையாக ஜெயித்த ரோஜா கதை - Yarl Voice

சிறு வயதில் நடிப்பு ஆர்வம்.. இளமையில் குடும்ப பாரம்… முன்னணி நடிகையாக ஜெயித்த ரோஜா கதைசின்னத்திரை ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழத்தக்கூடடிய வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள முக்கிய சீரியல் ரோஜா. வழக்கமாக குடும்ப பின்னணி கொண்ட கதையாக இருந்தாலும், அதை ரசிகர்களின் ரசனைக்கேற்ப காட்சி அமைப்புகள் வைத்ததே இந்த சீரியலின் வெற்றி என்று சொல்லாம். சில சமயங்களில் ரசிகர்கள் பொறுமையை ரொம்பவே சோதித்தாலும சீரிலுக்கு உண்டான ரசிகர்கள் கூட்டம் மட்டும் குறைவதே இல்லை.
ரோஜா சீரியல் வெற்றிக்கு திரைக்கதை ஒரு காரணம் என்றாலும் மற்றொரு காரணம் இந்த சீரியலின் நடிகர் நடிகைகள். அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இந்த சீரியலின் முதன்மை கேரக்டரான ரோஜாவாக நடித்து வரும் பிரியங்கா நல்கரி மற்றும் அர்ஜூன் கேரக்டரில் நடித்து வரும் சுப்பு சூரியன் ஆகிய இருவமு் முக்கிய காரணமாக உள்ளனர். இவர்கள் இருவருக்கும் தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், இவர்களுக்கு இடையிலான ரொமான்ஸ் காட்சிக்காவே ரசிகர்கள் பலரும் சீரியலை கண்டு ரசித்து வருகினறனர்.
தனது முதல் சீரியலில் நடித்து வரும் பிரியங்கா நல்கரி, இல்லத்தரசிகளின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தை சேர்ந்த இவர், சிறுவயது முதலே நடிப்பின் மீது ஆர்வத்துடன் இருந்துள்ளார். அதன்காரணமாக ஏராளமான மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடியுள்ளார். அதன்பிறகு சினிமா வாய்ப்பு தேடிய அவருக்கு கடந்த 2010-ம் ஆண்டு தெலுங்கு இயக்குநர் சந்திரா சித்தார்த்தா இயக்கித்தில் வெளியான அந்தாரி பந்துவையா படத்தில் நடித்தார்.
தொடர்ந்து நா சாமி ரங்கா வெல்கம் டூ அமெரிக்கா, கிக் 2, ஹைப்பர், ராணாவின் நேனே ராஜா நேனே மந்திரி, உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், தமிழில், சித்தார்த் நடிப்பில் வெளியான தீயா வேலை செய்யனும் குமாரு, மற்றும் லாரன்சின் காஞ்சனா 3 படத்தில் நடித்திருந்தார். மொத்தமாக இவர் நடித்துள்ள 10 படங்களும், பெரிய வெற்றிப்படங்கள் என்றாலும் பிரியங்கா பிரபலமான நடிகையாக உயர ரோஜா சீிரியல்தான் முக்கிய காரணம் என்று சொல்லாம். கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமான சென்றுகொண்டிருக்கிறது.
தற்போது பலரும் அறிந்த முன்னணி சீரியல் நடிகையாக வலம் வரும் பிரியங்கா தொடக்கத்தில ஒரு வேலை சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டுள்ளார். 2 தங்கை அம்மா அப்பா எல்லாரும் ஒரே அறையில் வசித்துள்ளனர். ஒரு விபத்தில் அவரது அப்பாவின் கால் முறிந்து வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஏற்பட்ட வறுமை காரணமாக இரவு உணவு இல்லாமல் பல நாட்கள் பட்டினியுடன் இருந்துள்ளாராம். திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு ஒரு சாதரண வாழ்க்கைத்தான் பிரியங்கா நல்கரி வாழ்ந்துள்ளார்.
பணம் இல்லாமல் கல்லூரி படிப்பை நிறுத்திய அவர், குடும்ப வறுமைக்காக வேலைக்கு சென்றுள்ளார். தற்போது பிரபலமான நடிக்கையாக உள்ள இவர், தங்கைகளை படிக்க வைத்து தானும் படித்து முடித்துள்ளார். வறுமையில் வாடிய குடும்பத்தை தூக்கிய நிறுத்திய பிரியங்கா தற்போது பல வீடுகளில் ரோஜா என்ற அடையாளத்துடன் உள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post