கலாச்சார மரபுகளை பின்பற்றி நல்லூர் பிரமணாக்கட்டுக்குளத்தை அழகுபடுத்த வேண்டும் - அங்கஜன் இராமநாதன் - Yarl Voice கலாச்சார மரபுகளை பின்பற்றி நல்லூர் பிரமணாக்கட்டுக்குளத்தை அழகுபடுத்த வேண்டும் - அங்கஜன் இராமநாதன் - Yarl Voice

கலாச்சார மரபுகளை பின்பற்றி நல்லூர் பிரமணாக்கட்டுக்குளத்தை அழகுபடுத்த வேண்டும் - அங்கஜன் இராமநாதன்



நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள, நல்லூர் பிரமணாக்கட்டு குளத்தை அழகுபடுத்தும் செயற்றிட்டத்தின் திட்ட வரைபுகள் தொடர்பான களவிஜயமொன்றை யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் இன்று மேற்கொண்டார்.

இதன்போது, நல்லூர் ஆலயச்சூழலோடு இணைந்துள்ள இக்குளத்தை புனரமைத்து அழகுபடுத்தும்போது யாத்திரிகர்கள் பெரிதும் நன்மையடைவர். ஆகவே இப்பணிகள் யாழ்ப்பாண மரபுகளையும், நல்லூர் ஆலய விழுமியங்களையும் உள்ளடக்கியவகையில் மேற்கொள்ளப்படவேண்டும் என நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளிடம் அங்கஜன் இராமநாதன் அவர்கள் வலியுறுத்தினார்.

மேலும் கிராமத்துடனான உரையாடல் செயற்றிட்டத்தினூடாகவும் இக்குளத்தின் புனரமைப்புக்காக, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

இவ்விஜயத்தில், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பணிப்பாளர், யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர், மாநகரசபை ஆணையாளர், நல்லூர் பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post