தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா - Yarl Voice தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா - Yarl Voice

தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு கொரோனாதென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ராபோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
நேற்று பரிசோதனை செய்யப்பட்டதில் நேர்மறை முடிவு வந்துள்ளது. லேசானா அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா வைரஸ் தொற்று சரியாகும் வரை சிரில் கேப் டவுனில் தனிமைப்படுத்திக் கொள்வார். ஜனாதிபதிக்கான அனைத்து பொறுப்புகளையும், துணை ஜனாதிபதி டேவிட் மபுஜா கவனித்துக் கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் சிரில் மேற்கு ஆபிரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்திருந்தார். அப்போது ஜனாதிபதி மற்றும் அவருடன் சென்றிருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. டிசம்பர் 8ஆம் திகதி ஜோகன்னஸ்பேர்க் திரும்பினார். அப்போது அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் எதிர்மறை முடிவு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post