வரவுசெலவுத் திட்ட முன்னுரிமைகள் தொடர்பில் யாழில் கலந்துரையாடல் - Yarl Voice வரவுசெலவுத் திட்ட முன்னுரிமைகள் தொடர்பில் யாழில் கலந்துரையாடல் - Yarl Voice

வரவுசெலவுத் திட்ட முன்னுரிமைகள் தொடர்பில் யாழில் கலந்துரையாடல்



கிராமிய உற்பத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் ஊடாக வீட்டுப் பொருளாதாரம் மற்றும் உணவுப்பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய வரவுசெலவுத் திட்ட முன்னுரிமைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

நமது உள்ளூர் பொருளாதாரத்தையும் உணவுப்பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதனூடாக கிராமிய உற்பத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்துவோம் என்ற தொனிப்பொருளில் தேசிய வரவுசெலவுத்திட்ட முன்னுரிமைகளை 2 ஆயிரத்து 22 ம் ஆண்டு செயற்படுத்தும் வண்ணம் பிரதேச மட்ட விழிப்புணர்வு கலந்துரையாடல்கள் பிரதேச மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில், நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவிற்கான கலந்துரையாடல் இன்று காலை 10 மணிக்கு பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளர் அங்கஜன் இராமநாதன், யாழ். மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர், மாவட்ட சமுர்த்தி முகாமையாளர், திட்டமிடல் அதிகாரிகள், கிராம சேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post