கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் நடந்துகொண்ட விதம் நாகரிகமானது- சந்திரிகா குமாரதுங்க - Yarl Voice கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் நடந்துகொண்ட விதம் நாகரிகமானது- சந்திரிகா குமாரதுங்க - Yarl Voice

கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் நடந்துகொண்ட விதம் நாகரிகமானது- சந்திரிகா குமாரதுங்க



கடந்த 17 ஆம் திகதி நடைபெற்ற கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது பட்டம் பெறவிருந்த சகல மாணவர்களும் நடந்து கொண்ட விதம் மிகவும் நாகரிகமானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா பல்கலை வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தலைமையில், அண்மையில் இடம்பெற்றிருந்த போது, சில மாணவர்கள் தேரரின் கைகளில் இருந்து பட்டத்தைப் பெற மறுப்பு தெரிவித்திருந்தனர்.

இது குறித்து சமூக ஊடகங்களில்  முன்னாள் ஜனாதிபதி குமாரதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் அரசாங்கம் தவறான தீர்மானங்களை எடுக்குமாயின் ஜனநாயக நாடு  என்ற வகையில் பிரஜைகளுக்கு தமது கருத்து களை வெளியிட உரிமை உண்டு என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் ஒன்றிணைந்து ஜனநாயகத்தைப் பாது காப்பதற்காகச் செயற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

மாணவர், மாணவிகள் தமதும், இலங்கை மக்களதும் ஜனநாயக உரிமைகளை உரிய முறையில் செயற்படுத்தினர். துப்பாக்கிகள் இல்லாது, குண்டுகள் இல்லாது தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் அவர்கள் இந்த ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டினர்.

மௌனமான அதேசமயம் பலம்வாய்ந்த அறிக்கையில் மாணவர்கள் தமது எதிர்ப்பை மிகவும் ஜனநாயக முறையில் வெளிக்காட்டினர். அன்றைய தினம் இலங்கையில் ஜனநாயகம் வெற்றி பெற்ற நாளாகப் பதிவாகியுள்ளது.

மாணவர்கள் தங்களின் விருப்பப்படி நடந்து கொண்டனர். குறித்த சம்பவம் தொடர்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

எனது கருத்தின் படி அன்றைய தினம் தான் நாட்டின் ஜனநாயகம் வென்றதாக நான் நினைக்கிறேன்.

இளைஞர்கள், யுவதிகள் மிகவும் ஜனநாயகமாக நடந்து கொண்டனர்.

மாணவர்களினதும் எங்களினதும் நாட்டின் மக்களின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக துப்பாக்கி குண்டுகளைப் பயன்படுத்தாமல், அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் மிகவும் நாகரிகமான முறையில் விரைவாகச் செயல்பட்டுள்ளனர்.

தங்களின் சுதந்திரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஏனையவர்களின் சுகத்திரத்துக்கு எந்தவிதமான குந்தகமும் ஏற்படாத வகையில் ஏனையவர்களின் மனதைக் காயப்படுத்தாமல் செயற்பட்டனர்.

குறித்த விடயம் தொடர்பாக யாரிடமிருந்தும் கேள்வி கேட்காமல் அரசாங்கம் தவறான தீர்மானம் எடுத்தால் அது குறித்து எதிர்த்து கேள்வி கேட்கும் உரிமை ஜனநாயக நாட்டில் பொது மக்களுக்கு உரிமை உண்டு. குறித்த மாணவர்கள் அன்றைய தினம் ஜனநாயகத்தின் உச்சக்கட்டத்துக்குச் சென்றுள்ளனர்.

தங்களின் எதிர்ப்பை ஒவ்வொரு இடத்துக்கும் சென்று துப் பாக்கி குண்டுகளைப் பயன்படுத்தாமல் அநாகரிகமான வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் மிகவும் நாகரிகமாக, அமைதியான முறையில் மிகவும் பலத்துடன் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி யுள்ளனர்.

குறித்த இளைஞர்கள், யுவதிகள் யார் என்று தெரியவில்லை என்றும் இருப்பினும் தான் முன்னாள் தலைவர் என்ற வகையில் தனது கௌரவத்தை வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் ஜனநாயகம் மீறப்பட்டமையால் சரியான முறையில் தங்களின் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post