எதிர்க்கட்சித் தலைவர் சஜித் 09 திகதி வடக்குக்கு விஜயம்! பலரையும் சந்திப்பு - Yarl Voice எதிர்க்கட்சித் தலைவர் சஜித் 09 திகதி வடக்குக்கு விஜயம்! பலரையும் சந்திப்பு - Yarl Voice

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் 09 திகதி வடக்குக்கு விஜயம்! பலரையும் சந்திப்பு



எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, எதிர்வரும் 9 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்டத்துக்குப் பயணம் மேற்கொள்கின்றார் என எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கான பயணத்தை முடித்துக்கொண்டு யாழ். வரும் சஜித், காலை 8.30 மணிக்கு ஊடக சந்திப்பை நடத்தவுள்ளார்.

அதன்பின்னர் நயினாதீவு சென்று, நயினாதீவு விகாரை மற்றும் கோயிலில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

அமரர் இராஜமஹேந்திரனின் நினைவாக தெல்லிப்பளை தளமருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளது.

மாலை 3.30 மணிக்கு திருநகரில் அரசியல் கூட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்றிரவு 7 மணிக்கு யாழ். வியாபார சமூகத்துடனான சஜித்தின் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

அதன்பின்னர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு சஜித் செல்கின்றார்.

11ஆம் திகதி மீண்டும் யாழ்ப்பாணம் வருகின்றார். அன்று முக்கியத்துவமிக்க சந்திப்புகள் நடைபெறவுள்ளன.

12ஆம் திகதி நல்லூர் கோயிலுக்குச் செல்வார். யாழ். ஆயரைச் சந்தித்துக் கலந்துரையாடவும் திட்டமிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post