யாழ்.கரப்பந்தாட்ட தொடரின் கிண்ணத்தை தனதாக்கிய அரியாலை கில்லாடிகள் 100! - Yarl Voice யாழ்.கரப்பந்தாட்ட தொடரின் கிண்ணத்தை தனதாக்கிய அரியாலை கில்லாடிகள் 100! - Yarl Voice

யாழ்.கரப்பந்தாட்ட தொடரின் கிண்ணத்தை தனதாக்கிய அரியாலை கில்லாடிகள் 100!யாழ்.கரப்பந்தாட்ட லீக் தொடரில் ஆவரங்கால் கிங்ஸ் அணியை வீள்த்தி வெற்றிக் கிண்ணத்தை அரியாலை கில்லாடிகள் 100 அணி கைப்பற்றியது. 

யாழ்.மாவட்ட கரப்பந்தாட்ட சங்கம் நடாத்திய யாழ்.கரப்பந்தாட்ட லீக் தொடரின் இறுதிப்போட்டி யாழ். புத்தூர் கலைமதி விளையாட்டு கழக மைதானத்தில் நேற்று முந்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

இப்போட்டியில் அரியாலை கில்லாடிகள் 100 அணியை எதிர்த்து ஆவரங்கால் கிங்ஸ் அணி மோதியது. 

நேற்று இரவு 7.00 மணியளவில் ஆரம்பமான இப்போட்டி ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை  மிக விறுவிறுப்பாக நடை பெற்றது. 

இரு அணி வீரர்களும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காது துடிப்புடனும், உட்சாகத்துடனும் தமது திறமைகளை மைதானத்தில் நொடிக்கு நொடி வெளிப்படுத்தி தத்தமது அணிகளுக்கான புள்ளிகளை பெற்றுக் கொடுத்தவண்ணம் களமாடினார்கள். 

முதல் சுற்றில் ஆவரங்கால் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. 2 ஆவது, 3 ஆவது சுற்றுக்களை அரியாலை கில்லாடிகள் 100 அணி வெற்றி கொண்டது. 4 ஆவது சுற்றில் ஆவரங்கால் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. 

மிக எதிர்பார்ப்புடன் ஆரம்பமான 5 ஆவது சுற்று அதீத விறுவிறுப்பு பெற்றது. இரு அணி வீரர்களும் தமது அணிக்காண புள்ளிகளை சேர்ப்பதில் கவணம் செலுத்தினர். 

ஒருவர் மாறி ஒருவர் புள்ளிகளை பெற்றுக் கொடுக்க போட்டியை காண வந்த ரசிகளின் ஆரவாரங்களும் அதிகரித்து காணப்பட்டது. 

இறுதி தருணத்தில் அரியாலை கில்லாடிகள் 100 அணி வீரர்களின் மதி நுட்பமான விளையாட்டு திறமையால் தொடர்ச்சியாக தமது அணிக்கான புள்ளிகளை பெற்றுக்கொடுத்தனர். 

எதிரணி வீரர்களை திணறடித்த அரியாலை கில்லாடிகள் 100 அணி வீரர்கள் தமது வெற்றியை உறுதி செய்தனர். 

இறுதி சுற்றை வெற்றி கொண்ட அரியாலை கில்லாடிகள் 100 அணியினர் வெற்றி கிண்ணத்தை தமதாக்கினர்.

இறுதி போட்டி நிகழ்வின் பிரதம
விருந்தினராக கடத்தொழில் அமைச்சர் டக்லஸ்தேவானந்தா வெற்றி பெற்ற அரியாலை கில்லாடிகள் 100 அணிக்காண வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்தார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post