இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 தாண்டியது: சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை - Yarl Voice இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 தாண்டியது: சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை - Yarl Voice

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 தாண்டியது: சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை



கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 100 தாண்டியுள்ளதாகவும், இது பிறழ்வின் அதிக பரவும் தன்மையைக் காட்டுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஒமிக்ரோன் பிறழ்வானது சமூகத்தில் பரவத் தொடங்கியுள்ளது , இது சமூகத்திலிருந்து ஏற்கனவே கண்டறியப்பட்ட பல தொற்றாளர்களின் ஊடாக இது தெளிவாகிறது.

இதேவேளை ஒமிக்ரோன் பிறழ்வு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில், ஒமிக்ரோன் ஏனைய வகைகளை விஞ்சலாம் மற்றும் இலங்கையில் முன்னர் ஆதிக்கம் செலுத்திய டெல்டா மாறுபாட்டை முந்தக்கூடும் என உள்ளூர் சுகாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களில் படிப்படியாக தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது, அதனால் இறப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளது என கொவிட்-19 ஒருங்கிணைப்பாளரான வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

மக்கள் சரியான நேரத்தில் பூஸ்டர் டோஸைப் பெறத் தவறினால் மற்றும் சுகாதார நடைமுறைகளுக்கு இணங்கத் தவறினால், ஓமிக்ரான் அலை வெளிப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒமிக்ரோனின் பரவல் அதிகமாக இருந்தாலும், அதன் தீவிரம் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.

 இருப்பினும், பல ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரோன் காட்டுத்தீ போல பரவி அழிவை ஏற்படுத்தி வருவதால், நிலைமையை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று அவர் வலியுறுத்தினார்.

முகக்கவசங்களை சரியாக முறையில் அணிதல் மற்றும் பூஸ்டர் டோஸை விரைவாக பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post