13 ஆவது திருத்ததில் தமிழர்களுக்கு தீர்வில்லை; சமஷ்டியே தீர்வு! பொய்யுரைக்காதீர்கள் முண்ணணியிடம் விக்னேஸ்வரன் கோரிக்கை - Yarl Voice 13 ஆவது திருத்ததில் தமிழர்களுக்கு தீர்வில்லை; சமஷ்டியே தீர்வு! பொய்யுரைக்காதீர்கள் முண்ணணியிடம் விக்னேஸ்வரன் கோரிக்கை - Yarl Voice

13 ஆவது திருத்ததில் தமிழர்களுக்கு தீர்வில்லை; சமஷ்டியே தீர்வு! பொய்யுரைக்காதீர்கள் முண்ணணியிடம் விக்னேஸ்வரன் கோரிக்கை13 ஆவது திருத்தம் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாது.ஆனால் சிறிய சிறிய அலுவல்களை பார்த்துக்கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ் கட்சிகள் ,இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில்,தெளிவு படுத்தும் ஊடகவியாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,
எம்மிடம் ஒரு முனை மடிந்த மண் வெட்டி உள்ளது.புது மண்வெட்டி வருவதற்கு காலம் எடுக்கும்.

இந்த நிலையில், இந்த பழைய மண் வெட்டியை பயன்படுத்தி என்றாலும் சிறிய வேலையை செய்ய வேண்டும்.புதிய மண் வெட்டி வரும் வரும் என்று இருப்பதில் அர்த்தம் இல்லை.

இதை போல தான் 13 ஆவது ,திருத்தம்.தமிழ் மக்களின் பிரச்சினைகள் இதன் மூலம் தீர்க்கப்படாது.ஆனால் சிறிய சிறிய அலுவல்களை பார்த்துக்கொள்ள முடியும் என்று தான் கூறுகின்றோம்.

நாம் இப்போது இருக்கும் நிலையில் இராணுவ ஆட்சி வடக்கு கிழக்கில் அதிகரிக்கிறது.சிங்கள குடியேற்றம் நடைபெறுகிறது.

நாம் ஒன்றுமே செய்ய முடியாமால் நிற்கிறோம்.இதற்கு இருக்கும் சட்டம் ஒன்றை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post