சுண்ணாகத்தில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு! - Yarl Voice சுண்ணாகத்தில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு! - Yarl Voice

சுண்ணாகத்தில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!யாழ் சுண்ணாகம் பிரதேச செயலக வீதிக்கு முன் விபத்து குடும்பஸ்தர் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிளை திருடி தப்பி சென்ற திருடர்கள்  மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

 இவ்விபத்து சம்பவத்தில் ராசா ரவிச்சந்திரன் வயது -  50 என்பவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

நேற்றிரவு இரவு   இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில்  தெரியவருவதாவது

சுண்ணாகம் மதுபான நிலையத்தில் நிலையத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிளை தென்மராட்சியைச் சேர்ந்த இருவர் திருடி தப்பியோடுவதனை மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் அவதானித்துள்ளார்

 இதனை அவதானித்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் உளிட்டோர்  திருடர்களை துரத்திச் சென்ற நிலையில் திருடர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்  வீதியில் வந்த மோட்டார் சைக்கிளை மோதி இவ்விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகின்றது

சம்பவ இடத்திலேயே அதிக குருதி பெருக்கு  ஏற்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் சாரதியான குடும்பஸ்தர் உயிரிழந்தார். 

விபத்தினை ஏற்படுத்திய இருவரும் பிடிக்கப்பட்டு சுண்ணாகம் பொலிஸார் கைது செய்துளளனர்

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post