அத்தியாவசிய உணவு- மருந்து -பொருட்களிற்கான வரிகள் நீக்கம்- அரசஊழியர்களிற்கு மாதாந்தம் 5000 ரூபா கொடுப்பனவு-அரசாங்கம் அறிவிப்பு! - Yarl Voice அத்தியாவசிய உணவு- மருந்து -பொருட்களிற்கான வரிகள் நீக்கம்- அரசஊழியர்களிற்கு மாதாந்தம் 5000 ரூபா கொடுப்பனவு-அரசாங்கம் அறிவிப்பு! - Yarl Voice

அத்தியாவசிய உணவு- மருந்து -பொருட்களிற்கான வரிகள் நீக்கம்- அரசஊழியர்களிற்கு மாதாந்தம் 5000 ரூபா கொடுப்பனவு-அரசாங்கம் அறிவிப்பு!



அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கான சகல வரியும் நீக்கப்படுவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

பெருந்தோட்ட துறைசார் குடும்பங்களுக்கு மாதாந்தம் ஒரு கிலோ கிராம் கோதுமை மா 80 ரூபா என்ற அடிப்படையில் 40 ரூபா நிவாரணத்துடன் 15 கிலோகிராம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

அரச சேவையாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் விசேட தேவையுடைய பாதுகாப்புப் படையினர் ஆகியோருக்கு இந்த மாதம் முதல் 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அத்துடன் சமுர்த்தி பயனாளர்களுக்கு இந்த மாதம் முதல் 1000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

மேலும் 20 பேர்ச்சர்ஸ்க்கும் குறைவான விவசாய நிலங்களைக் கொண்டுள்ள விவசாயிகளுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

தற்போதைய நிலையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பவற்றுடன் கலந்துரையாடப்படுவதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post