எம்ஜிஆரின் பிறந்ததினத்தில் உதவி வழங்கல் - Yarl Voice எம்ஜிஆரின் பிறந்ததினத்தில் உதவி வழங்கல் - Yarl Voice

எம்ஜிஆரின் பிறந்ததினத்தில் உதவி வழங்கல்தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் (MGR) 105வது பிறந்த தினம்  நேற்று மாலை யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு,  யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் மனைவி  மாலை அணிவித்து தீபம்  ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

அதனை தொடர்ந்து முன்னாள் வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோஷ் மற்றும் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் செல்வம் உள்ளிட்டோர்  எம்.ஜி.ஆர்  சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் குடும்பத்தினர்,எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது அண்மையில் இயற்கை எய்திய யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் நினைவாக அவர்களது குடும்பத்தினரால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகளும் வழங்கிவைக்கப்பட்டது.

யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் அன்மையில் இயற்கை எய்திய நிலையில் அவரின் குடும்பத்தினரால் யாழ் கல்வியங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எம் .ஜி.ஆர் சிலை புது பொலிவுடன் அமைக்கப்பட்டதுடன் யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் மற்றும் எம் .ஜி.இராமச்சந்திரனின் படங்கள்  கல்வெட்டுக்களாக பதிக்கப்பட்டு எம் .ஜி .ஆர் சிலை புது பொலிவுடன் மாற்றி அமைக்கப்பட்டது.

எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான விளங்கிய யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் எம்.ஜி.ஆர் நினைவேந்தல்கள் கல்வியங்காடு பகுதியில் இடம்பெற்றுவந்த நிலையில் அவர் அண்மையில் இயற்கை எய்தினார்.

யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலை எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் அவர்களின் சொந்த நிதியில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post