நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை இன்றையதினம் யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் போனோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முன்பாக காணாமல் போனோரின் உறவுகள் நீதி அமைச்சின் நடமாடும் செயலமர்வில் காணாமல் போனோர் விவகாரத்தை கையில் எடுக்கக்கூடாது என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
போராட்டக்காரர்களுடன் போலீசார் தள்ளு முள்ளில் ஈடுபட்ட நிலையில் மத்திய கல்லூரி முன்பாக குழப்பமான நிலை ஏற்பட்டது.
Post a Comment