பாகிஸ்தானில் நடந்த சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கணேஷ் இந்துகாதேவியை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
கச்சேரி நல்லூர் வீதியில் அமைந்துள்ள வைஎம்சிஏ மண்டபத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கணேஷ் இந்துகாதேவிக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு பதக்கங்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment