யாழில் சத்திர சிகிச்சையின் போது கவனயீனம் பெண் உயிரிழப்பு! - Yarl Voice யாழில் சத்திர சிகிச்சையின் போது கவனயீனம் பெண் உயிரிழப்பு! - Yarl Voice

யாழில் சத்திர சிகிச்சையின் போது கவனயீனம் பெண் உயிரிழப்பு!புற்றுநோய் காரணமாக கர்ப்பப்பையை அகற்றி  சத்திரசிகிச்சை செய்து கொண்ட பருத்தித்துறை யாக்கருவைச் சேர்ந்த (60. வயதான) பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  

குறித்த பெண்ணுக்கான சத்திரகிச்சை கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி நெல்லியடியில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில்  மேற்கொள்ளப்பட்டது. 

எனினும் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

பெண்ணின் சடலம் இன்று உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது சத்திரசிகிச்சை செய்யப்பட்ட போது பெண்ணின் உடலுக்குள் 50 cm நீளம் 10 cm அகலமுள்ள துணி ஒன்று வைத்து தையலிடப்பட்டமை கண்டறியப்பட்டது. 

இதனால் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அதுவே உயிரிழப்புக் காரணம் என சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post