பொதுமக்களிற்கு நியாயமான விலையில் அரிசியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஹர்சா டிசில்வா - Yarl Voice பொதுமக்களிற்கு நியாயமான விலையில் அரிசியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஹர்சா டிசில்வா - Yarl Voice

பொதுமக்களிற்கு நியாயமான விலையில் அரிசியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஹர்சா டிசில்வாசமையல் எரிவாயு வெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு அரசாங்கம் இழப்பீடு வழங்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டிசில்வா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
எதிர்கட்சி தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்த போதிலும் சமையல் எரிவாயு கலவை தொடர்பில் அரசாங்கம் பொய்சொல்லியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

சமையல்எரிவாயு கலவை மாற்றப்பட்டால்  சிலிண்டரில் உள்ள எரிவாயு வேகமாக முடிவதற்கான அழுத்தம் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் நன்மைகளை புறக்கணித்துவிட்டு அரசாங்கம் இலாபத்தை தேடி ஒடுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் சமையல் எரிவாயு கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களை அமைச்சரவை புறக்கணித்துவிட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அரிசி விலை அதிகரிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்சா டிசில்வா  பொதுமக்களிற்கு நியாயமான விலைகளில் அரிசியை வழங்குவதற்கு அரசாங்கம் தலையிடவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post