ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் நீக்கப்படுவார்களா? எதிர்க்கட்சித் தலைவராக மைத்திரியா? - Yarl Voice ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் நீக்கப்படுவார்களா? எதிர்க்கட்சித் தலைவராக மைத்திரியா? - Yarl Voice

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் நீக்கப்படுவார்களா? எதிர்க்கட்சித் தலைவராக மைத்திரியா?எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் பதவியிலிருந்து நீக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தற்போது இரண்டு அமைச்சரவை அமைச்சுகளையும் இரண்டு இராஜாங்க அமைச்சுகளையும் தற்போது அரசாங்கம் கொண்டுள்ளது.
பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 எம்.பி.க்கள் உள்ளனர்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற சில முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிய வந்துள்ளது.

அரசாங்கத்தில் உள்ளவர்களை இணைத்துக்கொண்டு எதிர்க் கட்சியிலும் சிலரின் ஆதரவைப் பெற்றுக்கொண்டு எதிர்க்கட்சியின் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக் கொண்டு இந்தப் பதவியைப் பெற திட்டமிட்டுள்ள தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனைப் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப் புடனும் கலந்துரை யாடல் இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post