சித்தார்த்தன் எம்பியின் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு! - Yarl Voice சித்தார்த்தன் எம்பியின் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு! - Yarl Voice

சித்தார்த்தன் எம்பியின் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு!பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனின் நிதி ஒதுக்கீட்டில் சங்கானை பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு  உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

சங்கானை பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்  முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளருமான பா.கஜதீபன், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் இ.கௌதமன் ஆகியோர் இணைந்து விளையாட்டு உபகரணங்களை கையளித்தனர்.

இதன்போது வட்டுக்கோட்டை இளந்துளிர் விளையாட்டுக் கழகம், பறாளை விளையாட்டுக் கழகம், விவேகானந்தா விளையாட்டுக் கழகம் ஆகியவற்றிற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post