யாழ் வந்துள்ள சஜித் பிரேமதாசாவால் முன்பள்ளி கட்டிடம் திறந்து வைப்பு - Yarl Voice யாழ் வந்துள்ள சஜித் பிரேமதாசாவால் முன்பள்ளி கட்டிடம் திறந்து வைப்பு - Yarl Voice

யாழ் வந்துள்ள சஜித் பிரேமதாசாவால் முன்பள்ளி கட்டிடம் திறந்து வைப்புஎதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்றையதினம் யாழ்ப்பாணம் - தையிட்டியில் முன்பள்ளி கட்டடத்தை திறந்து வைத்தார்.

வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றார்.

இந்த நிலையில் இன்று காலை தையிட்டி கலாவல்லி முன்பள்ளியின் புதிய கட்டடத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திறந்து வைத்துள்ளார்.

குறித்த கட்டடம் "றாகம" நிறுவனத்தின் அணுசரனை ஊடாக நோர்வே HETLAND பல்கலைக்கழக மாணவர்களின் நிதிப்பங்களிப்புடன் கடந்த 2 ஆயிரத்து 20 ஆம் ஆண்டு 8 ஆம் மாதம் மூன்றாம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டு இன்றையதினம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது மாணவர்கள் சான்றிதல் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமா சந்திரபிரகாஸ், மாவட்ட அமைப்பாளர் வ.பிரபாகரன், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post