யாருடைய பொறுப்பில் வடதாரகை மக்கள் கேள்வி? - Yarl Voice யாருடைய பொறுப்பில் வடதாரகை மக்கள் கேள்வி? - Yarl Voice

யாருடைய பொறுப்பில் வடதாரகை மக்கள் கேள்வி?



நெடுந்தீவு குறிகட்டுவான் இடையிலான கடற்போக்குவரத்தில் ஈடுபடும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடதாரகைப் படகு யாருடைய பொறுப்பில் இயங்குகின்றது என்பது மக்கள் கேள்வியாக காணப்படுகின்றது.

வடதாரகைப் படகு கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தென்னிலங்கை சுற்றுலாப்பயணிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதாகவும் பதிவுகள் எதுவுமின்றி அவர்கள் அனுப்பப்படுவதாகவும் நெடுந்தீவு மக்கள் தேசிய அடையாள அட்டை பதிவின் பின்னரே அனுப்பப்படுகின்றார்கள் இலங்கையிலேயே தேசிய அடையாள அட்டை பதியப்படும் ஓர் இட மாக நெடுந்தீவே காணப்படுகின்றது.

இன்றைய தினம் (ஜனவரி – 15) மதியம் 03.00 மணிக்கு புறப்பட வேண்டிய வடதாரகைப் படகு 02.00 மணிக்கு நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தில் இருந்த பயனிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டாதல மதியம் 03.00 மணிக்கு பிரயாணம் செய்வதற்காக சென்ற நெடுந்தீவு மக்கள் ஏமாற்றத்துடன் இறங்கு துறைமுகத்தில் காத்திருக்க வேண்டிய சந்தர்ப்பம் காணப்பட்டது. 

இது தொடர்பாக வீதி அதிகார சபையின் பிரதான பொறியியலாளர் மற்றும் தொழிறுட்ப உத்தியோகத்தர்களுடன் தொடர்பு கொண்ட போது கடற்படையினரே இதற்கான முடிவினை மேற்கொண்டு வருவதாகவும் மீளவும் வடதாரகை வந்து மீளவும் திரும்பி செல்லும் எனவும் தெரிவித்தனர் ஆயினும் குறிப்பிட்ட நேரத்திற்கு பயணிக்க வேண்டிய தீவக மக்க்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்துள்ளனர்.
 
நெடுந்தீவிற்கு வருகை தந்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தரும் குறிப்பிட்ட 02.00 மணி படகில் பயணம் செய்துள்ளதாகவும் அவருடன் தொடர்பு கொண்ட போது கடற்படையினரின் கட்டுப்பாட்டிலும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பரிபாலனத்துடனுமே வடதாரகைப் படகு சேவை இடம் பெறுவதாக தெரிவித்தார். 

காலையில் குறிகட்டுவானில் இருந்து 150 இற்கும் அதிகமான பிரயாணிகளை ஏற்றி வருகின்ற போதே இந்நிலமை ஏற்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். இவர்களது செயற்பாடுகளால் அன்றாடம் போக்குவரத்து செய்யும் பிரயாணிகள் ஏனைய பஸ் போக்குவரத்து போன்றவற்றிலும் பல இன்னல்களை எதிர்ககொள்ளுகின்றார்கள். 

நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்து தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையே பொறுப்பு என்பது கடந்த வருடம் ஆளுனர் செயலகத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலில் பெறப்பட்டதாகும் எனவே வீதி அபிவிருத்தி அதிகார சபை நெடுந்தீவு மக்களது கடற்போக்குவரத்து தொடர்பாக பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை இணைந்து சரியான நேர அட்டவணையினையும் நெடுந்தீவு மக்களுக்கான முக்கியத்துவத்தினையும் வழங்க வேண்டும என்பது மக்கள் வேண்டுகோளாக இருக்கின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post