பருத்தித்துறை வைத்தியசாலைக்கு சிறுநீர் சுத்திகரிப்பு இயந்திரம் சஜித் பிரேமதாசாவினால் வழங்கி வைப்பு - Yarl Voice பருத்தித்துறை வைத்தியசாலைக்கு சிறுநீர் சுத்திகரிப்பு இயந்திரம் சஜித் பிரேமதாசாவினால் வழங்கி வைப்பு - Yarl Voice

பருத்தித்துறை வைத்தியசாலைக்கு சிறுநீர் சுத்திகரிப்பு இயந்திரம் சஜித் பிரேமதாசாவினால் வழங்கி வைப்புபருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு இன்றைய தினம் சிறு நீர் சுத்திகரிப்பு இயந்திரத் தொகுதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால்  வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் 12 30 மணியளவில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் வே.கமலநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விலேயே சிறு நீர் சுத்திகரிப்பு இயந்திரத் தொகுதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ரூபா  24 இலட்சம் பெறுமதியான இந்த இயந்திரத்தை  சம்பிரதாயபூர்வமாக கையளிக்கும் நிகழ்வை இன்றைய தினம் இடம்பெற்றது.

நிகழ்வில் ஐக்கிய மகிழ்ச்சி சக்தி உடுப்பிட்டி தொகுதி அமைப்பாளர் அகிலதாஸ், கிருபா பியிற்சி கல்லூரி அதிபரும் ஐக்கிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்களில் ஒருவருமான திரு கிருபாகரன், மற்றும் கிளிநொச்சி யாழ்பாண மாவட்டங்களின் அமைப்பாளர்கள், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், மற்றும்  உத்தியோகத்தர் என பலரும் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிட தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post