காங்கிரஸின் முன்னாள் தலைவர் குமார் பொன்னம்பலத்தின் நினைவேந்தல் யாழில் இடம்பெற்றது - Yarl Voice காங்கிரஸின் முன்னாள் தலைவர் குமார் பொன்னம்பலத்தின் நினைவேந்தல் யாழில் இடம்பெற்றது - Yarl Voice

காங்கிரஸின் முன்னாள் தலைவர் குமார் பொன்னம்பலத்தின் நினைவேந்தல் யாழில் இடம்பெற்றதுஅகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முன்னாள் தலைவர் குமார் பொன்னம்பலம் அவர்களது நினைவேந்தல் நிகழ்வு  இன்று  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இதன்போது சுடர் ஏற்றப்பட்டு குமார் பொன்னம்பலம் அவர்களின் உருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாநகர முதல்வர் மணிவண்ணன், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன்,  உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

குமார் பொன்னம்பலம் 2000 ஆண்டு ஜனவரி 5ம் திகதி கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post