சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா நிறுத்தப்படுவதாக அறிவிப்பு! - Yarl Voice சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா நிறுத்தப்படுவதாக அறிவிப்பு! - Yarl Voice

சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா நிறுத்தப்படுவதாக அறிவிப்பு!தை பொங்கல் தினத்தில் நடத்துவிதற்கு திட்டமிடப்பட்டிருந்த வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வருடா வருடம் தை பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் திடலில் நடாத்தப்பட்டு வரும் பட்டத்திருவிழாவை இம்முறையும் நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்து அறிவித்திருந்தனர்.

அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி இம்முறை பட்டத்திருவிழாவை இடைநிறுத்துமாறு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் பட்டத்திருவிழா ஏற்பாட்டு குழுவினருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று மாலை இடைம்பெற்றிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் படத்திருவிழாவை தற்கால சூழ்நிலையில் இடைநிறுத்துமாறு பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இம்முறை வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா இடைநிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post