இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தல் மதிப்பீட்டில் யாழ் மாவட்டச் செயலகம் முதலிடம் - Yarl Voice இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தல் மதிப்பீட்டில் யாழ் மாவட்டச் செயலகம் முதலிடம் - Yarl Voice

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தல் மதிப்பீட்டில் யாழ் மாவட்டச் செயலகம் முதலிடம்


சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுய தொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு ஆகிய நிதியமைச்சின் ஏற்பாட்டின் கீழ் 2021ம் ஆண்டிற்கான  இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பான மாவட்ட மட்ட மதிப்பீட்டீல்,  வடக்கு மற்றும் கிழக்குப்  பிராந்தியங்களில் தேசிய மட்டத்தில் பயனாளிகள் இணைப்பு அடிப்படை மற்றும் பண சேகரிப்பு அடிப்படையில்    யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முதலாவதாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், பயனாளிகள் இணைப்பு மற்றும் பண சேகரிப்பு ஆகிய இரு அடிப்படையிலும் தேசிய மட்டத்தில் தெல்லிப்பழை பிரதேச செயலகம் முதல் இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன், கரவெட்டி மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகங்கள் தேசிய மட்டத்தில் பணசேகரிப்பின் அடிப்படையில் முறையே இரண்டாவது மூன்றாவது இடங்களை பெற்றுத் தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முதல் 10 இடங்களைப் பெற்றுக் கொண்ட உள்ளீர்ப்புச் செய்யும் உத்தியோகத்தர்களில்  சண்டிலிப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்  திரு.ச.கேசவேல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்ட நடைமுறைப்படுத்தல் மதிப்பீட்டில் பயனாளிகளை இணைத்துக்கொள்ளல் அடிப்படையிலும், நிதிசேகரிப்பு அடிப்படையிலும் யாழ்.மாவட்டச் செயலகம் முதலிடத்தில் தெரிவு செய்யப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ கடிதம் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் வடக்கு கிழக்கு மாகாண சிரேஷ்ட இணைப்பு அதிகாரி பா.பிரதீபன் அவர்களால் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேன் அவர்களிடம் நேற்றையதினம் (03) புதுவருட கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கையளிக்கப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post