கிழக்கு மாகாண தமிழ் மக்கள் விட்டுக்கொடுப்பு அரசியலை செய்யப் போவதில்லை - வியாழேந்திரன் - Yarl Voice கிழக்கு மாகாண தமிழ் மக்கள் விட்டுக்கொடுப்பு அரசியலை செய்யப் போவதில்லை - வியாழேந்திரன் - Yarl Voice

கிழக்கு மாகாண தமிழ் மக்கள் விட்டுக்கொடுப்பு அரசியலை செய்யப் போவதில்லை - வியாழேந்திரன்கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் இனியொரு காலத்திலும் விட்டுக் கொடுப்பு அரசியலை செய்யப் போவதில்லையென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள அமைச்சரின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதுடன் இந்த புத்தாண்டில் புதுமைகள் பிறந்து வாழ்வு செழிக்கப்பட்டும்,மகிழ்ச்சி தளைத்தோங்க பிரார்த்திக்கின்றேன்.

தனியார் தொலைக்காட்சியின் தீர்வு நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அகமட் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரச நிர்வாகத்தினை அரச பயங்கரவாதம் என்று கூறி மிக மோசமான முறையில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து சாடியிருந்தார்.சில பிரதேச செயலகங்கள் தொடர்பாகவும் கருத்துகளை முன்வைத்திருந்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தொடக்கம் உதவி அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்கள் உட்பட பலர் நிர்வாக பயங்கரவாதத்தினை மேற்கொள்வதாக கூறியிருந்தது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம்.அந்த விடயம் தொடர்பில் அவர் பகிரங்கமாக மன்னிப்புக்கோரவேண்டும்.

பாராளுமன்றத்தில் கூட அவர் நிர்வாக பயங்கரவாதம் என்பதை கூறியிருந்தார்.அதனை தொடர்ந்து பொதுவெளியில் தனியார் தொலைக்காட்சியொன்றின் நிகழ்ச்சியின்போதும் இவ்வாறான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

காணிக்கு பொறுப்பான மேலதிக அரசாங்க அதிபரின் பெயரை குறிப்பிட்டு காணிகளை அபகரிப்பதாகவும் முஸ்லிம்களுக்கு வழங்க மறுப்பதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அவரை நிர்வாக பயங்கரவாதியாக சுட்டிக்காட்டியிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post