சட்ட விரோத படகுகளை ஏலம் விடுவதால் இலங்கை இந்திய உறவு பாதிக்காது! யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் சங்கம் - Yarl Voice சட்ட விரோத படகுகளை ஏலம் விடுவதால் இலங்கை இந்திய உறவு பாதிக்காது! யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் சங்கம் - Yarl Voice

சட்ட விரோத படகுகளை ஏலம் விடுவதால் இலங்கை இந்திய உறவு பாதிக்காது! யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் சங்கம்



இலங்கையில் சட்டவிரோதமான முறையில் மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய படகுகளை ஏழாம் படுவதால் இலங்கை இந்திய உறவு பாதிக்காது என வடமாகாண தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்ன ராசா தெரிவித்தார் .

நேற்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 13 ஐ வலியுறுத்தி 6 கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக  ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டார்கள்.

குறித்த ஊடக சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்திய ரோலர் படகுகளை ஏல அடிப்படையில் விற்பனை செய்வதை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார்.

 இக்காலத்தை வடக்கு மாகாணத்தில் உள்ள 23 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் சார்பில் எதிர்க்கிறோம்.

சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு நாங்கள் ஒன்றை கூற விரும்புகிறோம் இந்திய அத்துமீறிய ரோலர் படகுகளினால் வடபகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதை இவர்கள் அறியவில்லையா?

இந்தியாவிடம் தமது நலன்களை தக்க வைத்துக் கொள்வதற்காக எமது மீனவர்களின் வயிற்றுப்பிழைப்பில் மண் அள்ளிப் போட வேண்டாம்.

2004ஆம் ஆண்டு தாங்கள் விட்ட தவறை இன்று மீனவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிற பிரச்சனக்கு காரணமாக இதை அறியாதவர் போல் செயற் படக்கூடாது.

நேற்றைய தினம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் கீரை மீன் தொழிலுக்காகச் சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை.

நாம் அறிந்த வகையில் நேற்றைய தினம் 11கடல் மைல் தொலைவில் இந்திய ரோலர்களின்  ஆக்கிரமிப்பு காணப்பட்டதாக தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறான நிலையில் மக்கள் பலத்த சந்தேகம் நிலவுகிறது இந்தியா ரோலர் படகுகளினால் வத்தராஜனில் காணாமல் போன மீனவர்களின் படகு மூழ்கடிககப்பட்டமையால் மீனவர்கள் காணாமல் போயிருக்கலாம் என எண்ணுகிறோம்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் எமது பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கு அழைத்தால் பலர் கலந்து கொள்ள மறுக்கிறார்கள்.

இந்தியாவைப் பார்க்கக் கூடாது என இந்தியா வழங்கும் சலுகைகளை பெற்றவர்களை இந்தியாவைப் பகைக் கூடாது என ஊடகங்களுக்கு கருத்து வழங்கி வருகிறார்கள்.

கடந்த காலங்களில் இலங்கை மீனவர்களின் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் இந்தியாவில்  விற்ககப்பட்டபோது தமிழ் அரசியல்வாதிகள் இலங்கை-இந்திய உறவை பாதித்துவிடும் திருப்பித் தாருங்கள் என எவரும் கேட்கவில்லை.

இப்போது சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பில் உள்நுழைந்த சுமார் 200 இந்திய படகுகளை ஏலத்தில் விடுவதற்கு தமிழ் அரசியல்வாதிகள் இந்தியாவை பகைக்கக் கூடாது என்கிறார்கள்.

தமிழ் அரசியல் வாதிகள் எமது பிரச்சினையை தீர்க்க விரும்பாவிட்டாலும் எமது பிரச்சனைகளை நீர்த்துப் போகச் செய்யும் நோக்கில்  இந்தியவுக்கு வக்காலத்து வாங்குவதை நிறுத்த வேண்டும்.

இந்தியாவுக்கே தெரியும் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில்  நுழைந்த படகுகளே கைது செய்யப்பட்டுள்ளன.

ஆகவே இந்திய மக்களுடன் நாம் நல்லுறவை கொண்டுள்ளோம் 200 சட்டவிரோதமான படகுகளை விற்பதால் இலங்கை இந்திய உறவு பாதிக்காது என அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post