நாட்டின் தீவிரகிசிச்சை பிரிவுகளில் தற்போதைய நிலை குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல் - Yarl Voice நாட்டின் தீவிரகிசிச்சை பிரிவுகளில் தற்போதைய நிலை குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல் - Yarl Voice

நாட்டின் தீவிரகிசிச்சை பிரிவுகளில் தற்போதைய நிலை குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்நாட்டின் தீவிரகிசிச்சை பிரிவுகளில் உள்ள 63 கட்டில்களில் கொரோனா நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

தீவிரகிசிச்சை பிரிவுகளில்70 கட்டில்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ள அவர் சில தரப்புகள் தெரிவிப்பதுபோல இடநெருக்கடி எதுவும் மருத்துவமனைகளில் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான ஒக்சிசன் உள்ளதாக தெரிவித்துள்ள அவர் கடந்த முறை கொரோனா உச்சநிலைக்கு சென்றவேளை மருத்துவமனைகளின் ஒக்சிசன் கையிருப்பை அதிகரிக்க தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னரும் இதே அளவு ஒக்சிசனை கைவசம் வைத்திருந்திருக்கின்றோம் இதன் காரணமாக ஒக்சிசன் குறித்த கவலை இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தேவைப்பட்டால் கடந்த தடவை போல ஒக்சிசனை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கை எடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post