வெளிநாடு வேலை.. அரபு நாடுகளில் வேலைக்கு போக விருப்பமா.. சிவகார்த்திகேயன் சொல்வதை கேளுங்க - Yarl Voice வெளிநாடு வேலை.. அரபு நாடுகளில் வேலைக்கு போக விருப்பமா.. சிவகார்த்திகேயன் சொல்வதை கேளுங்க - Yarl Voice

வெளிநாடு வேலை.. அரபு நாடுகளில் வேலைக்கு போக விருப்பமா.. சிவகார்த்திகேயன் சொல்வதை கேளுங்க



வெளிநாடு செல்லும் தமிழர்கள், எப்படி எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்பது பற்றி, நடிகர் சிவகார்த்திகேயன் பேசும் விழிப்புணர்வு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாழும் பெரும்பாலான மக்கள், பல்வேறு வெளிநாடுகளில் வேலைக்கு சென்று, சிறந்தவொரு எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என கனவு காண்கின்றனர்.

தங்களின் முழு உழைப்பையும் செலுத்தி, உயிரைக் கொடுத்து, தங்களின் குடும்பத்தின் நலனுக்காகவும் பாடுபட்டு வருகின்றனர். வெளிநாட்டுக்கு சென்றால், எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதால், வெளிநாட்டிற்கு செல்ல பல்வேறு வழிகளையும் தேடுகின்றனர் மக்கள்.

தவறான வழிகள்

அப்படி வெளிநாடு அழைத்துச் செல்ல பல்வேறு ஏஜெண்ட்டுகளின் வழிகளையும் அவர்கள் நாடுகின்றனர். அப்படி அவர்களின் உதவியை நாடும் போது, சில சட்ட விரோதமான வழிகளை கடைபிடிக்கவும் செய்கின்றனர். இதனால், அவர்களின் வேலை வாய்ப்பும், எதிர்காலமும் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது.

விழிப்புணர்வு வீடியோ

அது மட்டுமில்லாமல், இப்படிப்பட்ட தவறான ஏஜெண்ட்டுகள் மூலம், தவறான தொழில்களுக்காக பலர் நாடு கடந்து சென்று சிக்கிக் கொள்ளவும் செய்கின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக விழிப்புணர்வு வீடியோ ஒன்றை, கத்தார் நாட்டின் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் அறிவுரை

இதில், நடிகர் சிவகார்த்திகேயன், தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளில் செல்வோருக்கான விழிப்புணர்வு குறித்து பேசியுள்ளார். 'எப்பொழுதும் வெளிநாட்டு வேலைக்கு செல்வோர், அதற்கான தகுந்த பயிற்சியினை மேற்கொண்டு, பதிவு செய்யப்பட்ட வழிகளை பயன்படுத்த வேண்டும். சட்ட விரோதமான ஏஜெண்ட்டுகளின் வலையில் விழாமல் இருக்க, நேர்மையான பதிவு செய்யப்பட்ட ஏஜெண்ட்டுகளின் வழிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

எச்சரிக்கையாக இருங்கள்

அவர்களின் வழியைப் பெற, 'E Migrate' இணையதளத்தின் உதவியை நாடுங்கள். வெளிநாட்டில் பிரச்சனைகள் நேரும் போது, நம் இந்திய தூதரகத்தின் உதவியை நாட வேண்டும்.

மேலும், வெளிநாடுகளுக்கு செல்பவர்கள், தங்களின் பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டைகளின் நகல்களை குடும்பத்தினரிடம் கொடுத்து விட்டு செல்லுங்கள்' என இந்த விழிப்புணர்வு வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post