சொலைமானி கொலைக்காக டிரம்பினை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் - இல்லாவிட்டால் முஸ்லீம்கள் பழிவாங்குவார்கள் - ஈரான் ஜனாதிபதி - Yarl Voice சொலைமானி கொலைக்காக டிரம்பினை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் - இல்லாவிட்டால் முஸ்லீம்கள் பழிவாங்குவார்கள் - ஈரான் ஜனாதிபதி - Yarl Voice

சொலைமானி கொலைக்காக டிரம்பினை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் - இல்லாவிட்டால் முஸ்லீம்கள் பழிவாங்குவார்கள் - ஈரான் ஜனாதிபதிஜெனரல் ஹாசிம் சொலைமானியின் கொலைக்காக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்டிரம்பினை விசாரணைக்கு உட்படுத்தாவிட்டால் சொலைமானியின் கொலைக்கு பழிவாங்குவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சொலைமானி கொல்லப்பட்டு இரண்டுவருடங்களாவதை  குறிக்கும்  நிகழ்வில் உரையாற்றிய  ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி விசாரைணையை எதிர்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் ஈரான் பழிவாங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

சொலைமானியை கொலை செய்த குற்றத்திற்காக டிரமபையும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மைக்பொம்பியோவையும் நீதியான மன்று ஒன்றில் விசாரணை செய்யாவிட்டால் முஸ்லீம்கள் பழிவாங்குவார்கள் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆக்கிரமிப்பாளன்  முக்கிய குற்றவாளி கொலைகாரனான அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி டிரம்பினை இஸ்லாமிய பழிவாங்கும் சட்டத்தின் கீழ் விசாரiணை செய்து தண்டிக்கவேண்டும் இ;ல்லாவிட்டால் கடவுளின் தீர்ப்பை அவருக்கு எதிராக நிறைவேற்றவேண்டும் என ஈரான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
குற்றவாளி முன்னாள் ஜனாதிபதி பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றார் என அவர் தெரிவித்துள்ளார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post