இலங்கை இறைமையுள்ள நாடு இந்தியாவின் ஒரு பகுதியில்லை - தமிழ் நடாளுமன்ற உறுப்பினர்களின் கடிதம் குறித்து உதயகம்மன்பில - Yarl Voice இலங்கை இறைமையுள்ள நாடு இந்தியாவின் ஒரு பகுதியில்லை - தமிழ் நடாளுமன்ற உறுப்பினர்களின் கடிதம் குறித்து உதயகம்மன்பில - Yarl Voice

இலங்கை இறைமையுள்ள நாடு இந்தியாவின் ஒரு பகுதியில்லை - தமிழ் நடாளுமன்ற உறுப்பினர்களின் கடிதம் குறித்து உதயகம்மன்பிலஇலங்கை இறைமையுள்ள நாடு இந்தியாவின் ஒரு பகுதியில்லை என அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரி தமிழ்தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய பிரதமர்நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளமை குறித்து செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர்இதனை தெரிவி;த்துள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியுடனேயே பேசவேண்டும் - மோடியுடன்இல்லை என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாங்கள் இறைமையுள்ள நாடு இந்;தியாவின் ஒரு பகுதி இல்லை என்பதால் அவர்கள் பிரதமர் மோடிக்கு தெரிவிப்பதற்கு பதில் தங்கள் கரிசனைகைள  எங்கள் ஜனாதிபதிக்கு தெரிவித்திருக்கவேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எங்கள் தமிழ் சகோதரர்கள் இலங்கையின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடம்  தங்கள் கரிசனைகைள தெரிவித்திருக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post