களத்தில் எப்படியோ; இந்திய வீரர்கள் மீது எங்களுக்கு வேறலெவல் பாசம்” - பாக். வீரர் ரிஸ்வான் - Yarl Voice களத்தில் எப்படியோ; இந்திய வீரர்கள் மீது எங்களுக்கு வேறலெவல் பாசம்” - பாக். வீரர் ரிஸ்வான் - Yarl Voice

களத்தில் எப்படியோ; இந்திய வீரர்கள் மீது எங்களுக்கு வேறலெவல் பாசம்” - பாக். வீரர் ரிஸ்வான்பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான், இந்திய அணியுடனான தங்கள் அணி வீரர்களுக்கு உள்ள உறவை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அண்மையில் ஐசிசியின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் (2021) விருதை அவர் வென்றிருந்தார். 

“களத்தில் இந்தியா உட்பட எந்தவொரு எதிரணியாக இருந்தாலும் அந்த அணியை வீழ்த்துவதுதான் எங்கள் இலக்கு. அதுதான் எங்களுக்கு உள்ள ஒரே ஆப்ஷன். ஆனால் களத்திற்கு வெளியே எங்களுக்குள் அன்பும், மரியாதையும் கலந்துள்ளது. மற்றபடி களத்தில் இருக்கும் போது எதிரணியை முறைத்து பார்ப்பது, வம்புக்கு இழுப்பது மற்றும் உரக்க பேசுவதெல்லாம் ஒரு யுக்தி” என யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். 

ஆட்டம் முடிந்த பிறகு தோனி, கோலி மாதிரியான வீரர்களிடம் நாங்கள் பேசுவது அந்த அன்பின் வெளிப்பாடு எனவும் சொல்லியுள்ளார் அவர். கடந்த அக்டோபர் மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் மோதி விளையாடிய போது ரிஸ்வான் 55 பந்துகளில் 79 ரன்களை குவித்திருந்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post