தமிழ் மக்களுக்கு தீர்வு தராத கோட்டாவின் உரை எமக்கு தேவையில்லை! சித்தார்த்தன் எம்.பி - Yarl Voice தமிழ் மக்களுக்கு தீர்வு தராத கோட்டாவின் உரை எமக்கு தேவையில்லை! சித்தார்த்தன் எம்.பி - Yarl Voice

தமிழ் மக்களுக்கு தீர்வு தராத கோட்டாவின் உரை எமக்கு தேவையில்லை! சித்தார்த்தன் எம்.பிதமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு தராத ஜனாதிபதி உரை எமக்கு தேவையில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாட்டில் யுத்தம் நிறைவுக்கு வந்துள்ளது உண்மை.ஆனால் சமாதானம் ஏற்படவில்லை.

யுத்தம் ஏற்பட என்ன காரணியோ அது இன்னமும் தீர்க்கப்படவில்லை.

காரணிகள் அப்படியே உள்ளது. ஆகவே தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு தராத எந்த உரையும் எமக்கு பிரயோசனமற்றது.

மக்களின் அபிலாஷைகளை உள்ளடக்கியே நாம் கொள்கை வகுத்துள்ளோம்.அது நிறைவேற்ற பட வேண்டும்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் உள்ள படி பல விடயங்கள் நடைமுறையில் வர வேண்டும்.

இந்தியா இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.புதிய அரசியல் அமைப்பை இவர்கள் கொண்டு வருவார்களேயானால் அதில் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.

அத்துடன் நாட்டில் உள்ள 85 வீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியமை பாராட்ட பட வேண்டிய விடயம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post