எரிவாயு சிலிண்டர்களை வீட்டுக்கு கொண்டு வந்து தருவதாக அதிக பணம் வசூலிப்பு - Yarl Voice எரிவாயு சிலிண்டர்களை வீட்டுக்கு கொண்டு வந்து தருவதாக அதிக பணம் வசூலிப்பு - Yarl Voice

எரிவாயு சிலிண்டர்களை வீட்டுக்கு கொண்டு வந்து தருவதாக அதிக பணம் வசூலிப்புசமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் வேளையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களை வீட்டுக்கு கொண்டு வந்து தருவதாக கூறி அதிக பணத்தினை வாங்கும் முறைகேடு நடந்து வருவதாக மக்கள்  தெரிவித்தனர்.

home delivery சேவை எனக் கூறுபவர்கள் கொழும்பில் உள்ள ஒரு வீட்டிற்கு எரிவாயு சிலிண்டர் வழங்குவதற்கு 4,100 முதல் 4,500 ரூபாய் வரையிலும், கொழும்பிற்கு வெளியே மொறட்டுவை, மஹரகம, கம்பஹா, பாணந்துறை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு எரிவாயு சிலிண்டர் வழங்க 5,000 ரூபாயும் வசூலிக்கின்றனர். மக்கள் கூறுகின்றனர்.

லிட்ரோ சிலிண்டர் 12.5 சிலிண்டர் ரூ.2750 ஆகவும், லாப் சிலிண்டர்  ரூ.2840 ஆகவும் விற்கப்படும் நிலையில், .home delivery எனப்படும் காஸ் சிலிண்டர் ஒன்றுக்கு  1000 ரூபாவுக்கும் அதிகமாகவும்,  வசூலிக்கப்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கொழும்பு நகரம் உட்பட நாட்டின்  பல பகுதிகளில்  சமையல் எரிவாயுவினை கொள்வனவு செய்ய நீண்ட வரிசையில் இன்றும் காணப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post