யாழில் சிறப்பாக இடம்பெற்ற பட்டிப்பொங்கல்! மாட்டுவண்டி சவாரி செய்த இரானுவ தளபதி - Yarl Voice யாழில் சிறப்பாக இடம்பெற்ற பட்டிப்பொங்கல்! மாட்டுவண்டி சவாரி செய்த இரானுவ தளபதி - Yarl Voice

யாழில் சிறப்பாக இடம்பெற்ற பட்டிப்பொங்கல்! மாட்டுவண்டி சவாரி செய்த இரானுவ தளபதி



அராலி ஆவரம்பிட்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் யாழ் மாவட்ட கட்டளைத்தளபதியும் யாழ் மாவட்ட கொவிட் பிரதானியுமான மேஜர் ஜெனரல் டி.ஜி. எஸ். செனரத் யாப்பாவின் பங்குபற்றலில் பட்டிப்பொங்கல் முன்னெடுக்கப்பட்டது.

கந்தசாமி கருணாகரனின் ஒருஙாகினைப்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முதலாவதாக நிகழ்விற்கு வருகை தந்த விருந்தினர்களை ஆரார்த்லனதி எடுத்து மங்கல வாத்தியங்கலுடன் அழைத்து வந்து கோயில் முன்றலில் அமைக்கப்பெற்றிருந்த பொங்கல் திடலில் இராணுவ கட்டளைத்தளபதி உட்பட்ட விருந்தினர்கள்,சமூக மட்ட அமைப்பினர் ,பொதுமக்கள் என பலரும் அரிசியினை இட்டு சம்பிராதாயபூர்வமாக நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.

இதனைத்தடர்ந்து அராலி சரஸ்வதி மகாவித்தியாலய மாணவர்களினால் பண்ணிசை நிகழ்வும் இராமநாதன் நுண்கலைப்பீட மாணவர்களால். இசை நிகழ்வு ஒன்றும் முன்னெடுக்ப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சம்பிரதாய பூர்வமாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதியால் எருதிற்கு ஏர்கலவைபூட்டி நிலத்தை உழுகின்ற நிககனழ்வு முன்னெடுக்கப்பட்டது.
அதனைதொடர்ந்து இராணுவ கட்டளைத்தளபதி ஆலய வெளி வீதியைச்சூழ மாட்டு வண்டியில் சவாரி செய்து தானும் மாட்டு வண்டியை செலுத்தினார்.

பின்னர் சமயரீதியான பிரார்த்தனைகள் இடம்பெற்று பசுக்களுக்கு படையலிடப்பட்டு பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன.

இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதியும் யாழ் மாவட்ட கொவிட் பிரதானியுமான மேஜர் ஜெனரல் செனரத் யாப்பு,வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்மன் குணதிலக ,யாழ் மாவட்ட விசேட அதிரடிப்படை அதிகாரிகள், கந்தசாமி கருணாகரன், இராமநாதன் நுண்கலைப்பீட மாணவர்கள், அராலி சரஸ்வதி வித்தியாலய மாணவர்கள்,சமூக மட்ட அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் ,பாதுகாப்பு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இன்றைய நாளில் வலி மேற்கின் பாதுகாப்பு பலப்படுத்தபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post