என்னைத் திருடன் என நிரூபித்தால் அடிமை சாசனம் எழுதிக் கொடுப்பேன்! ஆனந்தசங்கரி சவால் - Yarl Voice என்னைத் திருடன் என நிரூபித்தால் அடிமை சாசனம் எழுதிக் கொடுப்பேன்! ஆனந்தசங்கரி சவால் - Yarl Voice

என்னைத் திருடன் என நிரூபித்தால் அடிமை சாசனம் எழுதிக் கொடுப்பேன்! ஆனந்தசங்கரி சவால்




கோடிகளுக்கு அடிமைப் படாத என்ன திருடன் எனக் கூறி வருபவர் நிரூபித்தால் எனது சொத்துக்களை அடிமை சாசனம் எழுதி அவருக்கு வழங்குவேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் பழம்பெரும் தமிழ் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியை கைப்பற்ற முயற்சிப்போர் கட்சியின் வரலாறு தெரியாதவர்களும் கட்சியின் வயதின் கால்பங்கு கூட வரதாவர்களே அபகரிக்க முயன்றனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணி மக்களுடைய சொத்து நான் பதவிகளுக்கு கோடிகளுக்கு ஆசைப்பட்டவன் கிடையாது.

அமிர்தலிங்கம் இருந்தபோது நான் அப்போதிருந்த செல்வாக்கில் பாராளுமன்றம் சென்று இருக்கலாம் நீலன் திருச்செல்வம் வந்தபோது பாராளுமன்றம் சென்றிருக்கலாம் ஆனால் நான் அவ்வாறு பதவிகளுக்காக ஆசைப்படவில்லை.

அப்போதைய பிரதம மந்திரியாக இருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா என்னை அழைத்து உன்னைப்போல் தமிழ் ஜனநாயகவாதி பாராளுமன்றத்திலே இருக்க வேண்டும் நான் ஆசனம் தருகிறேன் வா என்றார்.

நான் அவரிடம் கூறினேன் பதவிகளுக்காக எனது கொள்கையை விட்டு உங்களிடம் சேர்வதற்கு விருப்பம் இல்லை என தெரிவித்தேன்.

மீண்டும் ஒருமுறை அவர் என்னைச் சந்தித்தபோது நான் ஒரு பயலையும் மனம் மாறி இருப்பேன் என்ற நோக்கத்தோடு பாராளுமன்றம் வருகிறாயா எனக் கேட்டார்.

அன்று நான் நினைத்திருந்தால்   பதவிக்காக எதையும் செய்திருக்கலாம் கொள்கையுடன் பயணிக்க வேண்டும் என்பதற்காக நான் அவ்வாறு செய்யவில்லை.

ஆனால் தற்போது எனது கட்சியை அபகரிப்பதற்காக கட்சி தொடர்பில் அறியாதவர்களும்  கொள்கை தொடர்பில் அறியாதவர்களும் கூட்டம் கூடி தமக்குள்ளே நிர்வாகம் தெரிவு செய்கிறார்கள்.

காட்சியில் யார் அங்கத்துவம் உடையவர்கள் என கூறும் அதிகாரம் எனக்கே இருக்கிற நிலையில் கட்சியின் கோப்புகளும் என்னிடமே இருக்கின்றது.

ஒருவர் தன்னை உபதலைவர் என்கிறார் நான் நியமிக்கவில்லை தானே பெயரை கூறிக்கொண்டு அவர் பின்னால் ஒரு குழு வருகிறது கட்சியை எம்மிடம் தாருங்கள் என.

புதிய நிர்வாகக் குழுவை எண்ணி விழுந்து விழுந்து சிரித்தேன் அழுதேன் என்னுடைய வாழ்நாளில் இப்படியும் ஒரு சம்பவம் நடக்கிறது என.

நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை யாருடைய பணத்தையும் அபகரிக்க வில்லை அதனால்தான் கடவுள் என்னை  88 வயதிலும் நடமாடி திரிய வைத்திருக்கிறான்.

நான் ஒரு அகிம்சை வாதி உலக நாடுகள் ஒன்று சேர்ந்து என்னை கௌரவித்து பிரான்ஸ் நாட்டில் வைத்து ஒரு கோடி ரூபாய் நிதியும் தந்தார்கள்.

ஆகவே தமிழர் விடுதலைக் கூட்டணியை சரியான முறையில் ஒழுங்கமைக்கும் வரை யாருக்கும் கட்சியை விட்டுக் கொடுக்க மாட்டேன் முடிந்தால் காட்சியை அபகரிக்க நினைப்பவர்கள் தமது அங்கத்துவத்தை உறுதிப்படுத்தும் கட்சியை அவர்களிடம் கொடுப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post